மேலும் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்புநாகர்கோவில் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் பணிபுரிந்து வந்தவர் ஆய்வாளர் ராஜசேகர். நாகர்கோவிலில் சிடி கடை நடத்தி வந்தவர் கண்ணன். சிடி கடையில் அவ்வப்போது சோதனை இடாமல் இருக்க சிடி கடை உரிமையாளர் கண்ணனிடம் ஆய்வாளர் ராஜசேகர் ரூபாய் ஐம்பதாயிரம் லஞ்சம் கேட்டு உள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத கண்ணன் அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பியாக இருந்த . சுந்தர்ராஜனிடம் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் பேரில் அப்போதைய லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் ஆய்வாளர் ராபின் ஞானசிங் வழக்கு பதிந்ததார். அதன் பின்னர் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாரின் ஆலோசனைப்படி ஆய்வாளர் ராஜசேகர் கேட்ட ரூபாய் ஐம்பதாயிரத்தை ரசாயன பொடி தடவி வடசேரி அண்ணா சிலை அருகே தங்கியிருந்த லாட்ஜில் பணத்தை நேரில் ஆய்வாளர் ராஜசேகரிடம் புகார்தாரர் கண்ணன் கொடுக்கும்போது அங்கு மறைந்திருந்த அப்போதைய லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி திரு சுந்தர்ராஜ் கையும் களவுமாக பிடித்து கைது செய்தார். வழக்கை அப்போது ஆய்வாளராக இருந்த ஹெக்டர் தர்மராஜ் விசாரணை நடத்தி குற்ற அறிக்கை தாக்கல் செய்து இருந்தார். அந்த வழக்கில் புகார்தாரர் கண்ணன் மற்றும் ஒரு சில சாட்சிகள் பிறழ் சாட்சியாக மாறி ஆய்வாளர் ராஜசேகருக்கு சாதகமாக சாட்சியம் அளித்ததாக கூறப்படுகிறது. ஆயினும் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் படி நாகர்கோவில் தலைமை குற்றவியல் நடுவர் ஆவணங்கள் மற்றும் ரசாயனம் தடவிய நோட்டுகளை வாங்கியது உட்பட முக்கிய ஆதாரங்களை கருத்தில் கொண்டு குமரி லஞ்ச ஒழிப்பு பிரிவு பதிவு செய்திருந்த சட்டப்பிரிவுகள் 7ன் படியான குற்றத்திற்கு மூன்று ஆண்டுகளும் 13(1)D ன்படியான குற்றத்திற்கு மூன்று ஆண்டுகளுமாக மொத்தம் ஆறு ஆண்டுகள் சிறை தண்டனையும் 20000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. அதாவது தலா மூன்று ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையை மூன்று ஆண்டுகளில் அனுபவிக்க தீர்ப்பு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. லஞ்ச வழக்கில் கைதாகி சுமார் 15 வருடங்களாக நடந்து வந்த வழக்கில் தற்போது தண்டனை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது