நமது நாடு முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் ஒவ்வொரு நாளும் பாலியல் ரீதியாக குழந்தைகள் தொல்லைகளை அனுபவித்து வருவதும் அதிகரித்து வருகிறது. என்னதான் சட்டங்கள் போட்டு தடுக்க நினைத்தாலும் குழந்தைகள் பாலியல் ரீதியாக தொல்லைகளை அனுபவிப்பதை தடுக்க முடியவில்லை. தினமும் ஏதாவது ஒரு மூளையில் குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவது தொடர்பான செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.
இந்தியாவில் ஒரு மணி நேரத்திற்கு குறைந்தபட்சம் 4 குழந்தைகள் பாலியல் ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகிக் கொண்டிருக்கின்றனர். இதற்கு போதையையும் ஒரு காரணமாக கூறலாம். போதை ஆசாமிகள் பச்சிளம் குழந்தைகள் என்று கூட பார்க்காமல் தங்கள் காம பசிக்கு அவர்களை ஆளாக்கிவிடுகின்றனர். சில குழந்தைகள் இதனால் இறந்தும் இருக்கின்றன. குழந்தைகளின் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்வதால் குழந்தைகளை வயதானவர்கள் பாதுகாப்பில் விட்டுச் செல்கின்றனர். அவர்கள் எத்தனை மணி நேரம் குழந்தையை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பது புரியவில்லை. பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த பதிவை வெளியிடுகிறோம்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்றலாம் என்று இந்த பதிவை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்…
குழந்தைகள் வீட்டில் தனியாக இருக்கும்போது அவர் யார் பாதுகாப்பில் இருக்கிறாரோ அவர்களுடன் அடிக்கடி பேசி குழந்தையின் நடவடிக்கைகளை தெரிந்துகொள்ளுங்கள். 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் என்றால் அவர்களிடமே அடிக்கடி பேசுங்கள். குழந்தைகள் எந்தெந்த இடத்திற்குத் தனியாகச் செல்கின்றார்களோ அங்கு நம்பகத்துக்குரிய குறிப்பிட்ட நபரின் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அவர்களிடம் குழந்தைகள் நடவடிக்கைகள் குறித்து கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.
குழந்தைகளை தவறான நபர்கள் சீண்டுகிறார்கள் என்றால் உற்சாகம் குறைந்து சோர்வாகக் காணப்படுவார்கள். யாருடனும் பேசிப் பழகி, சிரிக்க மாட்டார்கள். அந்த குறிப்பிட்ட நபரைக் கண்டால் பயப்படுவார்கள். எப்போதும் தனிமையில் அமர்ந்து ஏதாவது யோசனையில் ஆழ்ந்து இருப்பார்கள். படிப்பில் முன்பு இருந்த கவனம் குறைந்து இருக்கும். விளையாட்டு,இசை, நடனம் போன்ற எதிலுமே ஆர்வம் இருக்காது.
சரியாகத் தூங்க மாட்டார்கள். தேவையில்லாத கனவுகள் தோன்றும். அவர்கள் தங்கள் பிரச்சனையைச் சூசகமாக வெளிப்படுத்துவார்கள். இந்த சூழலில் பெற்றோர்கள், குழந்தைகளிடம் இதமாகப் பேசி பிரச்சனையைத் தெரிந்து கொள்ள வேண்டும். எந்த நபர் இந்த தொல்லைக்கு காரணம் என்பதை அறிந்து, அந்த நபரைக் கண்டித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அந்த நபரின் தொடர்பை முற்றிலுமாக துண்டிக்க வேண்டும். குழந்தைகளுக்குத் தேவையான கவுன்சிலிங் வழங்க வேண்டும்.
குழந்தையை மன பாதிப்பிலிருந்து முழுவதுமாக மீட்டெடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு பிடித்தமான ஒன்றைத் தேர்வு செய்து அந்த விசயத்தில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும். இது மாதிரியான சூழல் எந்த வகையிலும் இனிமேல் ஏற்படாதபடி எச்சரிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உயிருக்கு மேலான நம் குழந்தைகளின் வாழ்வு வளமாக இருக்க நாம் எல்லா வகையிலும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதைப் பெற்றோர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
குழந்தைகள் மெச்சூரிட்டி அடையும் வரை அவர்களது நடவடிக்கைகளை மிகமிக கவனமாக கவனித்து வந்தால் அவர்கள் தேவையில்லாத பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகமாட்டார்கள். இதனை பெற்றோர்கள் கவனமாக கவணித்தால் போதும் குழந்தைகள் வாழ்வில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காது.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு