புதுச்சேரி:
புதுவையில் கொரோனா தொற்று உயர்ந்து வருகிறது. புதுவையில் மொத்தம் 255 பேருக்கு தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக 36 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 15, காரைக்காலில் 19, ஏனாமில் 2 பேர் தொற்றுடன் உள்ளனர். புதுவையில் 3 பேர் ஆஸ்பத்திரியில் உள்நோயாளிகளாக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் 71 பேரும், காரைக்காலில் 51பேரும், ஏனாமில் 13 பேரும் என மொத்தம் 135 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். புதுவை மாநிலத்தில் இதுவரை கொரோனாவுக்கு ஆயிரத்து 977 பேர் பலியாகியுள்ளனர். புதுவையில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசும், சுகாதாரத்துறையும் எடுத்து வருகிறது.
இதுகுறித்து அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:-
கொரோனாவின் தாக்கம் அதிகம் உள்ளதாக மருத்துவத்துறை அறிவுறுத்தியது. இதனால் பள்ளிகளுக்கு 10 நாள் விடுமுறை அளிக்கப்பட்டது. மீண்டும் மருத்துவத்துறை அறிக்கை பெற்று முதலமைச்சருடன் கலந்து பேசிய உரிய முடிவை கல்வித்துறை எடுக்கும். ஏற்கனவே பள்ளிகள் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என உத்தரவு உள்ளது.
பொது இடங்களில் முக கவசம் அணிவது அவசியம் என சுகாதாரத்துறை அறிவுறுத்துகிறது. கட்டாயம் முக கவசம் அணிவது குறித்து முதலமைமைச்சர் ஆலோசித்து முடிவெடுத்து அறிவிப்பார். புதுவை தொழில் தொடங்க ஏதுவான மாநிலமாக உள்ளது. புதுவையில் மருந்து நிறுவனங்கள், ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் வர தயாராக உள்ளது. பல பிரெஞ்சு நிறுவனங்கள் நேரடியாக வந்து சந்தித்துள்ளன.
சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத நிறுவனங்களை பிரெஞ்சு தூதரகம் சார்பில் கொண்டுவர தயாராக உள்ளனர். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் வந்துள்ளன. இந்த அரசு தொழில் முதலீட்டாளர்களுக்கு இன்சென்டிவ் வழங்கியுள்ளது. சலுகைகளை வழங்கியுள்ளோம். இதனால் சேதராப்பட்டு நிலம் தொழில் முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு தொழிற்சாலைகள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு