ஜிஎஸ்டி கவுன்சில் அண்மையில் அறிவித்த பொது மன்னிப்பு திட்டங்கள் குறித்து சென்னை வெளி ஆணையரகத்தின் மத்திய ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஜிஎஸ்டி வரி செலுத்துவோருக்கு விரிவான விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை அன்று ஸ்ரீபெரும்புதூரில் உள்ள இருங்காட்டுக்கோட்டையில் நடைபெற்றது.வணிகர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், ஜிஎஸ்டி கவுன்சில் வரி இணக்க நடைமுறைகளை எளிதாக்க புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன்படி ஜிஎஸ்டி குழுமத்தின் 54-வது கூட்டத்தில், சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தில் ஒரு முக்கிய மாற்றத்தை அறிமுகப்படுத்தியது. இது பழைய வழக்குகளில் உள்ள நிலுவைத் தொகை குறித்த நடைமுறைகளில் வரி செலுத்துவோருக்கு உதவும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய விதிமுறையின் கீழ், வர்த்தகர்கள் 2017-18-ம் ஆண்டு முதல் 2019-20-ம் ஆண்டு வரையிலான சரக்கு மற்றும் சேவை வரி நிலுவைத் தொகை, அதற்கான வட்டி மற்றும் அபராதம் ஆகியவற்றின் மீது சிஜிஎஸ்டி சட்டம், 2017-ன் பிரிவு 73-ன் கீழ் நிவாரணம் பெற விண்ணப்பிக்கலாம்.வணிகர்கள் எதிர்கொள்ளும் நீண்டகால பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் தாமதமான உள்ளீட்டு வரி கடன் தொடர்பான உரிமைகோரல்களுக்கு ஜூலை 2017 முதல் மார்ச் 2021 வரையிலான காலத்திற்கான உள்ளீட்டு வரிக் கடனை தாமதமாகப் பெறுவது தொடர்பான வரி கோரிக்கைகளை முறைப்படுத்துவதற்கான கால வரம்பை 2021 நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வரி தொடர்பான வழக்குகளைக் குறைப்பதில் உள்ள முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு சென்னை வெளிப்புற சிஜிஎஸ்டி ஆணையரகம், ஜிஎஸ்டி பொது மன்னிப்புத் திட்டங்கள் குறித்து வரி செலுத்துவோரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான பணியைத் தொடங்கியுள்ளது. கூடுதலாக, இத்தகைய நடவடிக்கைகள் வரி தொடர்பான சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்கான கருத்துக்களை சேகரித்தல், குறைகளை நிவர்த்தி செய்தல் மற்றும் ஜிஎஸ்டி தொடர்பாக வரி செலுத்துவோர் எதிர்கொள்ளும் நடைமுறை சவால்கள் அல்லது சிரமங்களை அடையாளம் கண்டு தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.நிகழ்ச்சியில் உரையாற்றிய சென்னை புறநகர் ஆணையரகத்தின் ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் ஆணையர் திரு எஸ்.நாசர் கான், ஜிஎஸ்டி துறைக்கும், வரி செலுத்துவோருக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதில் இத்தகைய திட்டங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.இதுபோன்ற முயற்சிகள் வரி செலுத்துவோருக்கு அது தொடர்பான புரிதலை ஏற்படுத்தவும் பொது மன்னிப்பு திட்டங்களுக்கான அணுகுமுறையை மேற்கொள்ளவும் உதவிடும் என்று கூறினார். வரி தொடர்பான தகராறுகளைக் குறைப்பதிலும், வணிகத்திற்கு உகந்த வரிவிதிப்பு சூழல் அமைப்பை உருவாக்குவதிலும் இத்தகைய திட்டங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக அவர் கூறினார்.கூடுதல் ஆணையர் (சிஜிஎஸ்டி) ரஞ்சித்குமார், இணை ஆணையர்கள் (சிஜிஎஸ்டி) கே எஸ் ரமேஷ் பாரதி மற்றும் ஆர்.ஜே.முரளி ராவ், உதவி ஆணையர் (சிஜிஎஸ்டி) பிரசாத் கிருஷ்ணன் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த முயற்சியில் தமிழ்நாடு மாநில ஜிஎஸ்டி துறையின் துணை ஆணையர்களும் பங்கேற்றனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு