பெருநகர சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் 10வது மண்டலம், வார்டு 133 மற்றும் வார்டு 141க்குட்பட்ட தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சி.ஐ.டி. நகர் பிரதான சாலையில் ரூ.131 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ள மேம்பாலம் அமைக்கும் பணியை அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர். உடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.கருணாநிதி (தியாகராய நகர்), த.வேலு (மயிலாப்பூர்), துணை மேயர் மு.மகேஷ்குமார், முதன்மை செயலாளரும், ஆணையருமான ககன்தீப் சிங் பேடி, இணை ஆணையர் (பணிகள்) டாக்டர். ஜி.எஸ்.சமீரன், நிலைக்குழுத் தலைவர் (பணிகள்), நே.சிற்றரசு, ஆளுங்கட்சி தலைவர் ஆர்.ராமலிங்கம், நியமனக் குழு உறுப்பினர் ராஜா அன்பழகன், கோடம்பாக்கம் மண்டலக் குழுத் தலைவர் எம்.கிருஷ்ணமூர்த்தி, மத்திய வட்டார துணை ஆணையர் எஸ்.ஷேக் அப்துல் ரகுமான், தலைமை பொறியாளர் (பொது) எஸ்.ராஜேந்திரன், தலைமை பொறியாளர் (கட்டடம்) எஸ்.காளிமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு