தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் சைதை எஸ்.குணசேகரன் ஏற்பாட்டில் சென்னை சின்னமலை செயின்ட் பிரான்சிஸ் சேவியர் உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழவுத்துறை அமைச்சரும், சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான மா.சுப்பிரமணியன் சீருடைகளை வழங்கினார். இதில் திமுக. சைதை கிழக்கு பகுதி செயலாளரும், 13வது மண்டல குழு தலைவருமான இரா.துரைராஜ் இரா.துரைராஜ் தலைமை தாங்கினார். சைசை மேற்கு பகுதி செயலாளரும், 10வது மண்டல குழு தலைவருமான எம்.கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். இதில் திமுக நிர்வாகிகள் சைதை சம்பத், சைதா மா.அன்பரசன், வழக்கறிஞரும், கவுன்சிலருமான எம்.ஸ்ரீதரன் மற்றும் எல்.ஆரோக்கியராஜ், மு.ஆரோக்கியம், இரா.சுதாபிரியன், எஸ்.ராதாகிருஷ்ணன், பள்ளி நிர்வாகத்தினர் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். முடிவில் ஆ.உதயசூரியன் நன்றி கூறினார்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு