மதுரை: சிறு தானியங்களுக்கு விவசாயிகளும் தொழில்முனைவோரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார்.
உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகம், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து சிறுதானிய விழா மற்றும் கண்காட்சியை மதுரை வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நடத்தின. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தாமோ அன்பரசன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் கண்காட்சியை ஆகியோர் திறந்து வைத்து சிறுதானியத்தின் நூல்களை வெளியிட்டார்கள்.
இந்நிகழ்வில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: “இன்றைய வேகமான உலகில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு குறித்து நாம் அதிகம் கவனம் செலுத்துவதில்லை. இன்று நம்மிடையே பரவியுள்ள பல்வேறு வகை உணவுப் பழக்க வழக்கங்களால் நாம் நம்முடைய பாரம்பரிய உணவு பழக்கத்திலிருந்து வெகு தூரம் சென்று விட்டோம். தமிழர்களின் பாரம்பரிய உணவு முறையில் முதலிடத்தில் இருந்தது. தினை, கேழவரகு, கம்பு, சோளம், சாமை, குதிரைவாலி போன்ற உடலுக்கு வலிமை சேர்க்கும் சிறுதானியங்கள். அதன் பிறகே, அரிசி, கோதுமை போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்த வகை சிறுதானியங்கள் ஊடுபயிராகவே விளைவிக்கப்பட்டு வந்தது.
சிறுதானியங்கள் பயன்படுத்துவது மக்களிடையே குறைந்ததால், விவசாயிகளும் அதனை பயிரிடுவதை குறைத்து கொண்டனர். ஆனால், இன்றைய இளைய சமுதாயத்தினர் இடையே, ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இயற்கை உணவு முறைக்கு மாற ஆர்வம் காட்டுகின்றனர். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி நம் விவசாயிகளும், தொழில்முனைவோர்களும், சிறுதானியங்களை விளைவிக்கவும், அவற்றை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றவும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு