கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து சிறுவனை தாய் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது சிறுவனை அமர வைத்துவிட்டு தாய் மருந்து வாங்க சென்றுள்ளார். அப்போது சிறுவனை, அந்த மருத்துவமனையில் துப்புரவு பணியாளரான ரமீஸ் என்பவர் கழிவறைக்கு அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக யாரிடமும் சொல்லக்கூடாது எனவும் அந்த சிறுவனை மிரட்டியுள்ளார். அப்படி இருந்த போதிலும் நடந்த சம்பவத்தை அழுதபடியே தனது தாயிடம் அந்த சிறுவன் கூறினான். இதனை கேட்டு சக நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, அந்த துப்புரவு பணியாளரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ரமீஸ் மீது காவல் நிலையத்தில் தாய் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து ரமீஸ் மீது போக்சோ சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது சிறையில் அடைத்தனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு