சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்திற்கு ‘கொட்டுக்காளி’ என பெயரிடப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். நடிப்பில் பிசியாக இருக்கும் சிவகார்த்திகேயன் படத்தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் என்கிற நிறுவனத்தின் மூலம் ஏராளமான படங்களை தயாரித்து வருகிறார்.
இவரது தயாரிப்பில் வெளிவந்த கனா, அருவி, டாக்டர், டான் போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்ற நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் தயாரிக்க உள்ள புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்திற்கு ‘கொட்டுக்காளி’ என பெயரிடப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக சூரி நடிக்கிறார்.
பி.எஸ்.வினோத்ராஜ் இயக்குகிறார். இவர் இதற்கு முன் இயக்கிய கூழாங்கல் என்கிற திரைப்படம் உலகளவில் பல்வேறு விருதுகளை குவித்தது. இப்படத்தில் நாயகியாக நடிகை அன்னா பென் நடிக்கின்றனர்.
சக்திவேல் ஒளிப்பதிவில் கணேஷ் சிவா படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சூரி, தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு