

சென்னை அண்ணா சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத் துறையினர் ரூ.23.5 கோடி மதிப்புள்ள 23.48 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.அண்ணா சர்வதேச விமான நிலையத்தில் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் பாங்காக்கிலிருந்து சென்னை வந்த இந்தியப் பயணிகள் 3 பேரை (ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு ஆண்கள் ஒரு பெண்) இடைமறித்து பரிசோதனை செய்தனர். அவர்களின் உடைமைகளை பரிசோதித்த போது குளிர்பதன செய்யப்பட்ட பழப் பெட்டிகளில் 23.48 கிலோ எடையுள்ள கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சுங்கத் துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. சட்ட விரோத சந்தையில் இதன் மதிப்பு ரூ.23.5 கோடியாகும்.இந்தப் பயணிகள் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர். மேல் விசாரணை நடைபெற்று வருகிறது.