சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், பேசின் பாலம் மற்றும் வியாசர்பாடி வழித்தடத்தில் மழைநீர் தேங்கியுள்ளதன் காரணமாக 4 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பெய்த கனமழையால் பேசின் பாலம் மற்றும் வியாசர்பாடி இடையேயான வழித்தடத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் 4 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று மாலை 6.05 மணிக்கு, திருப்பதியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு புறப்படும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று இரவு 11 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து ஈரோடு செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்படுகிறது.
இன்று மாலை 4.35 மணிக்கு, சென்னை சென்ட்ரலில் இருந்து செல்ல வேண்டிய திருப்பதி செல்லும் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று இரவு 9.15 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து, மைசூரு செல்லும் காவிரி எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்படுகிறது.