பகுஜன் சமாஜ் கட்சி சென்னையில் நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில் 2011 மதுராந்தகம் தச்சூர் கிராமத்தில் அருட்பணி ஜான் அவர்களின் சகோதரர் வேளாங்கண்ணி அவர்களின் உடலை புதைப்பதற்கு அனுமதிக்காத தீண்டாமை கொடுமைக்கு எதிராக மறைந்த அருட்பணி ஜான் சுரேஷ் முன்னெடுப்பில் களத்தில் நின்று போராடி 200 ஆண்டுகளாக கடைபிடித்த தீண்டாமை கொடுமையை தகர்த்து தானே நேரில் நின்று இறந்தவரை புதைக்க ஏற்ப்பாடு செய்தார்
மறுநாள் புதைக்கும் பணியாளர் ராஜேந்திரனை ஆதிக்க சாதியினர் வெட்டி அருகில் இருக்கும் குளத்தில் வீசி சென்றதை கண்டித்து மறுநாள் BSP மாநிலங்கள் அவை உறுப்பினர் திருமிகு பிரமோத் குரில் அவர்களை அழைத்து வந்து ராஜேந்திரன் படுகொலைக்கு நீதி கேட்டு போராடி அவரின் உடலையும் பொதுக் கல்லறையில் அடக்கம் செய்ய ஏற்ப்பாடு செய்த சமரசமற்ற போராளி சமத்துவ தலைவர் அண்ணன் K ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களின் போர்க் குணத்தை நினைவு கூர்ந்தார் மறைந்த அருட்பணி ஜான் சுரேஷ் போன்ற அனைத்து தலித் குருக்களை ஒன்றிணைக்க வேண்டுகோளும் விடுத்தார் நினைவுகளுடன் .. தமிழக காவல்துறை உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து தகுந்த நீதியை பெற்றுத்தர வலியுறுத்தி நினைவேந்தல் நிகழ்வில் கிறித்தவ மக்கள் களத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பே பெலிக்ஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
அண்ணன் ஆர்ம்ஸ்ட்ராங் இணையர் அவர்களுக்கு ஆறுதல் சொல்லி நீதிக்கான போராட்டத்தில் கிறித்தவ மக்கள் களம் உங்களோடு துணை நிற்கும் என்றும் அவர்கள் மாநில முதன்மை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு ஏற்றதற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார் . BSP மாநில தலைவர் P ஆனந்தன் இறுதியாக நினைவேந்தல் உரையாற்றினார் மாவட்ட தலைவர் A. ராபர்ட் மற்றும் தொழிற்சங்க தலைவர் திரு அடைக்கல் ராஜ் முன்னிலை வகித்தார் கிறித்தவ மக்கள் களம் சார்பில் கிறிஸ்டோபர் சகாயராஜ் , கஸ்பர் , வினோத் குமார் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
