சென்னை:
சென்னை-ராஜஸ்தான் இடையேயான டி20 போட்டிக்கு வருகிற 9-ம் தேதி டிக்கெட் விற்பனை செய்யப்பட உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் ஆன்லைனிலும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரின் 17வது போட்டியில் ஏப்ரல் 12ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியை நேரில் காண சென்னை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர். இந்த ஐபிஎல் சீசன்தான் தோனியின் கடைசி சீசனாக கருதப்படும் நிலையில் சென்னையில் நடைபெறும் ஒவ்வொரு போட்டியையும் நேரில் காண ரசிகர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் 9ம் தேதி தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. C,D,E Lower-Ï.1,500; D,E Upper-Ï.3,000; I,J,K Lower-Ï.2,500; I,J,K Upper-ரூ.2,000 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு