சென்னை 10வது மண்டலம், 142வது வார்டில் உள்ள மெட்ரோ தண்ணீர் குழாய் பழுதடைந்த நிலையில் தண்ணீர் வீணானது. ஒரு மனிதனின் அடிப்படை தேவைகளில் முக்கியமானது குடிநீர். அந்த குடிநீர் வீணானதால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிகப்பட்டது. இந்த குழாயை சரிசெய்ய வேண்டி மக்கள் குடிநீர் வாரியத்தை அனுகி புகார் அளித்தனர். ஆனால் அதற்கு தீர்வுகாண மறுத்தது குடிநீர் வாரியம். மக்களின் புகார் மனுவை கண்டுகொள்ளாத AE இன் அலட்சியப்போகினால் பல்லாயிரம் லிட்டர் தண்ணீர் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக இரவு 9 மணிக்கு திறந்துவிடப்படும் தண்ணீர் காலைவரை அடையாறு ஆற்றில் கலந்து வீணானது. அதனால் அப்துல் ரசாக் தெரு, அண்ணா நகர், டோபி கானா, சலவை காலனி, கோதமேடு நகர், திடீர் நகர், கலைஞர் கருணாநிதி தெரு போன்ற இடங்கள் பாதிக்கப்பட்டு சுமார் ஒரு நாளைக்கு 50 லாரிகளின் மூலம் தண்ணீர் அந்த மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படுகிறது. AE அவர்கள் புகார் மனுவிற்கு நடவடிக்கை எடுக்காத நிலையில் தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு மக்கள் தகவல் தெரிவித்தனர்.
உடனே தகவல் எக்ஸ்பிரஸ் நிருபர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விவரங்களை கேட்டறிந்து AE அவர்களை நேரில் சந்தித்து மெட்ரோ குடிநீர் குழாய் பழுதடைந்ததை கருத்தில் கொண்டு அதனை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதுமட்டும் அல்லாமல் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த புகார் புத்தகத்திலும் இது சம்மந்தமாக குறிப்பிட்டுள்ளார். அதனடிப்படையில் தற்போது குழாய் சரியும் பணி நட்ந்துவருகிறது. மழைநீரை சேமித்து நீர்வளத்தை பெருக்கவும், குடிநீரை வீணாக்கக்கூடாது என்றும் மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் அரசு குடிநீர் குழாயை சரிசெய்ய முன்வராமல் தாமதித்தது ஏன்?
லாரிகள் மூலம் பல ஆண்டுகளாக அந்த பகுதில் வாழும் மக்களுக்கு குடிநீர் எடுத்து செல்வதை வாடிக்கையாக இருக்கிறது. இந்நிலையில் குடிநீர் குழாய்களை சரிசெய்து கொடுத்தால் லாரிகளுக்கு செலவாகும் பல லட்சங்கள் அரசாங்கத்திற்கு வருவாயாக இருக்குமே! மேலும் இதுபோன்ற அவல நிலை ஏற்படாமல் அத்துறை சார்ந்த அதிகாரிகள் தங்கள் பணிகளை சரியாக செய்வார்களா? என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.