சென்னை:
சென்னை சைதாப்பேட்டை தாடண்டர்நகர் பொதுப்பணித் துறை அரசு அலுவலர் நல சங்கத்திற்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக சி.1 வகை குடியிருப்புக்கு முன்பாக, சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏராளமான பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். பொதுக்குழு கூட்டத்தில் கீழ்காணும் தீர்மானங்கள் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களின் இசைவுடன் நிறைவேற்றப்பட்டன:
சங்கத்திற்கு தேர்தல் நடத்துவது, சங்கத் தேர்தல் 23.04.2023 (ஞாயிற்றுக்கிழமை) நடத்துவது. அதற்காக சங்கத் தேர்தலை நடத்துவதற்கு மூன்று தேர்தல் ஆணையாளர்களை நியமித்தது.
அதில் தேர்தல் ஆணையராக என்.ரகுராம், தேர்தல் இணை ஆணையர்களாக கோவிந்தராஜி (சி2/89), பிரேம்குமார் (பி/26) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தலுக்கான மனு தாக்கல் செய்யும் நாள் – 23.03.2023 (வியாழக்கிழமை)
மனுவினை திரும்பப் பெறும் நாள் – 09.04.2023 ( ஞாயிற்றுக்கிழமை)
தேர்தல் நாள் – 23.04.2023 (ஞாயிற்றுக்கிழமை)
வாக்கு எண்ணிக்கை நாள் – 23.04.2023 (ஞாயிற்றுக்கிழமை)
தேர்தல் நடைபெறும் நேரம் — காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை.
வாக்கு எண்ணிக்கை மாலை 6 மணி முதல் நடக்கிறது. அன்று இரவுக்குள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையர்கள் தெரிவித்துள்ளனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு