சென்னை:
ஜிபே மூலம் தற்போது புதிய மோசடி நடைபெறுவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
மத்திய அரசு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் போன்பே, ஜி.பே என்று டிஜிட்டல் முறைகளை அறிமுகம் செய்துள்ளது. சாப்பாடு கடை முதல் பெரிய அளவிலான செலவுகள் வரை நாம் இப்போது ஜிபே மூலமே செயல்படுத்தி வருகிறோம். ஆனால் தற்போது அதிலும் மோசடி நடப்பதாக ஒரு தகவல் வந்துள்ளது.
யாரோ ஒருவர் தெரிந்தே உங்கள் கணக்கு அல்லது ஜிபேவுக்கு பணத்தை அனுப்புகிறார். உங்கள் கணக்கில் தவறுதலாக பணம் அனுப்பிவிட்டதாக கூறி பணத்தை திரும்ப அனுப்ப மோசடி நபர் கூறுவார். நீங்கள் பணத்தை திருப்பி அனுப்பினால், உங்கள் கணக்கு ஹேக் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். யாராவது உங்கள் கணக்கில் தவறாக பணம் அனுப்பினால் காவல்நிலையம் வந்து பணமாக எடுத்து கொள்ளச் செல்லுங்கள் என்று காவல்துறை தெரிவித்துள்ளனர்.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மூலம் பணத்தை பெறுவதும் அல்லது வேறொருவருக்கு பணத்தை அனுப்புவதும் மிக மிக எளிமையாக உள்ளது. இதனால் பயனர்கள் பெரும்பாலும் தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனையே விரும்புகின்றனர். ஓட்டல், டீக்கடை, மளிகை கடைகள் என அனைத்து இடங்களிலும் யுபிஐ மூலமாக பணம் செலுத்தும் வசதியுள்ளது. அதேவேளையில் எந்த அளவிற்கு எளிமையாக மாறுகிறதோ, அதே அளவிற்கு சில பிரச்சினைகளும் உருவாகின்றன.
இந்நிலையில் யாரோ ஒருவர் தவறாக உங்கள் கணக்கிற்கு பணம் செலுத்திவிட்டதாக கூறி பணம் திருப்பி கேட்டால் உடனடியாக காவல்நிலையத்தை அணுகுமாறும் தெரியாத நபர்கள் உங்கள் வங்கி கணக்கில் பணம் செலுத்தினாலும் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி தெரிவித்துள்ளனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு