சென்னை:
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
‘ஜெயிலர்’ திரைப்படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் ரூ.25 கோடியும் உலக அளவில் ரூ.90 கோடியும் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ‘ஜெயிலர்’ திரைப்படத்தை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இயக்குனர் நெல்சனை பாராட்டியுள்ளார். இது குறித்து நெல்சன் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “ஜெயிலர் திரைப்படம் பார்த்ததற்கு முதலமைச்சருக்கு மிகவும் நன்றி. உங்களின் ஊக்கமும், பாராட்டுகளுக்கும் நன்றி. நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் உங்கள் வார்த்தைகளால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்” என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு