தை 1ஆம் தேதியை தமிழ் புத்தாண்டு தொடக்க நாளாக முன்னாள் தமிழக முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்கள் பிறப்பித்த அரசாணை பின்னாளில் அரசாட்சிக்கு வந்த ஜெயலலிதாவால் மாற்றப்பட்டு சித்திரை 1ஆம் தேதி தான் தமிழ் புத்தாண்டு தொடக்கம் என்று சமஸ்கிருத புத்தாண்டுக்கு கணக்குக்கு ஆதரவாக அரசாணை பிறப்பிக்கப்பட்டு விட்டதுஅதனை நீக்கி மீண்டும் கலைஞர் அறிவித்தபடி தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாள் என்று அரசாணை பிறப்பிக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களிடம் தொடர்ந்து வேண்டுகோள் விடுப்பது மிக அவசியமாகவும் மிக அவசரமாக உள்ளதுதமிழ் உணர்வு தமிழ்ப்பற்று தமிழ் ஆர்வம் கொண்ட அனைவரும் தமிழ் நாடு முதலமைச்சருக்கு இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடிதங்கள் மின்னஞ்சல் முகநூல் வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம் டெலிகிராம் உட்பட்ட செய்திகள் மூலம் இன்று முதல் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான வேண்டுகோள் மற்றும் நினைவூட்டல் கடிதங்களை அனுப்புவோம் வாரீர் வாரீர்
இப்படிக்கு தமிழ் இராசேந்திரன் தமிழுணர்வாளர்கள் பேரவை கரூர்