அதிமுக- பாஜக இடையே கடந்த சில நாட்களாக வார்த்தை மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் பாஜக ஐடி பிரிவு நிர்வாகி நிர்மல்குமார் அதிமுகவில் இணைந்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றம்சாட்டி பேசி வருகின்றனர்.
இந்தநிலையில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகையில், சட்ட மன்றத்தில் அம்மாவின் சிங்கப் பார்வைக்கு அனைவரும் அமைதியாக இருந்த காலம் எல்லாம் உண்டு. கேவலம் அண்ணாமலை அரசியலுக்கு ஒரு கத்துக்குட்டி. உங்கள் வீட்டு அம்மாவை புகழ்ந்து பேசினால் தான் வீட்டில் சோறு கிடைக்கும் என்றால் புகழ்ந்து பேசுங்கள். அதற்கு நாங்கள் இடையூறாக இல்லை. ஆனால் புரட்சித்தலைவி அம்மாவை ஒப்பிட்டுப் பேசக்கூடாது. அம்மாவுக்கு நிகர் அம்மா தான் என பேசியிருந்தார்.
இந்த பேச்சு அதிமுக-பாஜக இடையே மோதலை அதிகப்படுத்திய நிலையில் தற்போது மற்றொரு முன்னாள் அமைச்சரின் பேச்சு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி முத்தையாபுரத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை விமர்சித்த முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் பேசினார். அதில், திமுக அமைச்சர்கள் மீது அண்ணாமலை முறைகேடு புகார் அளித்தது பணம் கேட்பதற்காகத்தான்.
தமிழகத்தில் தேர்தல் என்றால் போட்டி எப்போழுதுமே திமுக- அதிமுக இடையே தான் இருக்கும். பாஜக தனித்து போட்டியிட்டால் அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்க நேரிடும் என்றும் அவர் கூறினார். இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பாஜகவின் எட்டயபுரம் மண்டலச் செயலாளர் காளிராஜ், முன்னாள் அமைச்சர் சண்முக நாதனை தொடர்பு கொண்டு தனது கவலையை தெரிவித்துள்ளார்.
அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவில் உள்ள நிர்வாகிகளின் முழு ஆதரவு இருப்பதாக தெரிவித்தார். அதிமுகவை யார் வழி நடத்துகிறார்கள் என பாஜகவினருக்கு தெரியாது என சண்முகநாதன் கூறியுள்ளார்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு