இந்த அநியாயத்தை பாருங்கள், தமிழக கத்தோலிக்க திருச்சபையில் ஏகப்பட்ட கணக்கெடுக்க முடியாத வகையில் ஏராளமான சொத்துக்கள் இருக்கின்றன…. இவைகள் அனைத்தும் முன்னோர்கள் (யாரோ பலரால்) பல வகையில் கத்தோலிக்க ஆலயங்கள் மற்றும் கல்விக்கூடங்கள் கட்ட இந்த நிலங்கள் கொடுக்கபட்டவைகள்… இவ்வகை நிலங்களை கத்தோலிக்க மக்களின் வளர்ச்சிக்காக மட்டுமே பயன் பட வேண்டியவை,ஆனால் இந்த நிலங்களை வேலியே பயிரை மேய்ந்தது போல, ஆயர்கள் மற்றும் குருக்களால் களவாடப்பட்டு, முறைகேடாக விற்கப்படுகின்றன…ஆயர்கள் குருக்கள் ஆன்மீகத்தை மறந்து, சொகுசு வாழ்க்கையை நோக்கியும், அதிகாரத்தை நோக்கியும் சென்றால் கத்தோலிக்க திருச்சபையின் மாண்பும், புனிதமும் கெட்டுப்போய், ஆன்மீகம் வேரற்று போகுமே, என்ற வேதனையில், ஆயர்கள், குருக்கள் செய்யும் இந்த தவறை தடுத்து, ஆன்மீகம் நன்றாக வளர்ந்து அதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் கடமை நமக்கு உள்ளதே என்ற நல்லெண்ணத்தில்..சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பாத்திமா அன்னை ஆலய கத்தோலிக்க கிறிஸ்தவர், தோழர் எல்சியூஸ் பெர்ணான்டோ என்பவர், (PIL) ஒரு பொதுநல வழக்கு ஒன்று போட்டிருக்கிறார், தவறு செய்தவர்களுக்கு தண்டனை பெற்று தரவேண்டும் என்று, அந்த வழக்கை அவர் பதியவில்லை, கத்தோலிக்க மக்களின் பயன்பாட்டிற்கான நிலங்களை மீட்க வேண்டும் அதே வேளையில், இனிவரும் காலங்களில், கத்தோலிக்க திருச்சபையின் நிலங்கள், முறைகேடாக விற்பனை செய்யப்பட கூடாது என்ற நல்லெண்ணத்தில் அந்த வழக்கை பதிவு செய்துள்ளார்…ஆனால் வேதனையான விஷயம் என்னவென்றால், கேடுகெட்ட சிலர், அவருக்கும் அவரை சார்ந்தவர்களுக்கும், கொலைமிரட்டல் விடுத்துள்ளார்கள் என்பதுதான், வேதனைக்குரிய விஷயம்…மொத்தம் 11 நபர்கள் மீது அவருக்கு சந்தேகம் இருக்கிறது, சொந்த பங்கில் மூன்று நபர்கள், வழக்கறிஞர் ஒருவர், மறைமாவட்ட …….. …… ….
சிலர் என்று மொத்தம் 11 நபர்கள் அடையாளம் காண்பதற்கு புகார் ஒன்றை தயாரித்து காவல் துறை தலைவர் ( DGP) மற்றும், காவல் துறை ஆணையாளர் அவர்களிடம் அளிக்கயிருப்பதாக கூறினார்… கண்டிப்பாக காவல் துறை தன் கடமையை செய்யும்…இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் இவர் கத்தோலிக்க திருச்சபையின் புனிதம் கெடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் நல்ல கிறிஸ்தவராக இருந்து போராடும் இவரை, அவரின் சொந்த பங்கில் பலர் மிகவும் ஏளனமாக புறம் பேசுவதை என்னிடம் வேதனையோடு கூறியபோது, அவரின் ஆதங்கத்தை நினைத்து, நானும் வேதனை பட்டேன், நான் அவருக்காக வேதனை படவில்லை, அவரின் கோடம்பாக்கம் பாத்திமா பங்கு மக்களுக்காக வேதனைபட்டேன் , அநீதிக்கு எதிராக போராடும் இவரைப் போல மதுரை மறைமாவட்டத்தில் யாரும் இல்லையே என்று எங்கள் கிறித்தவ வழக்கறிஞர்கள் வட்டத்தில் நாங்கள் பேசிக்கொண்டு இருக்கிறோம்….அவரிடம் பேசியபோது கடைசியாக… எங்கள் பங்கில் இரு திருமண மண்டபங்கள் உள்ளன அதன் வாடகையை 7 பங்கு பேரவை பொதுக்குழு கூட்டத்தில் பேசி அழுத்தம் கொடுத்து ஐந்தாயிரம், ஐந்தாயிரம், என இரு மண்டபங்களின் வாடகையை குறைத்தது கூட இந்த இந்த மக்களுக்கு தெரியவில்லை, அதற்காகத்தான் வேதனைபடுகிறேன் என்று கூறி, நான் இப்படிதான் தோழரே, திருச்சபையின் அவலங்களை சரிசெய்ய போராடிக்கிட்டே இருப்பேன் மக்கள் என்னை ஏசினாலும், பேசினாலும் அதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன் என்று கூறியது, அவரின் ஆழமான உறுதியை காட்டியது,சென்னையிலும் எங்களுக்கு வேண்டிய வழக்கறிஞர்கள் சிலரை அவருக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறோம், பங்கு மக்கள் நண்பர்கள் கைவிட்டாலும் நாங்கள் அவருக்கு அரணாக தோழர்களாக இருந்து அவரின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்போம்…. விரைவில் அவரை மதுரைக்கு வரவழைத்து இங்கே இருக்கும் சில அமைப்புக்களை சந்திக்க ஏற்பாடு செய்ய போகிறோம்…அவரின் இந்த சட்டப்போராட்டத்தில், இறைமகன் இயேசு அவரோடு இணைந்து வழிநடத்தி வெற்றி பெற வைப்பார்…

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு