இன்று சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத் தலைமையிடமான சிவ.இளங்கோ இல்லத்தில் ஒன்றியத்தின் மாநிலத் தலைவர் திரு.ஆ.துரைப்பாண்டி தலைமையில் கூடி தானைத் தலைவர் சிவ.இளங்கோ அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தியதோடு தலைமையிடத்தில் அமைந்துள்ள கொடிக்கம்பத்தில் ஒன்றியக் கொடியினை அண்ணன் திரு.ஆ.துரைப்பாண்டி ஏற்றிவைத்து கொடி வணக்கம் செலுத்தப்பட்டது.அத்துடன் உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஒன்றியத்தின் வட்ட, மாவட்ட மற்றும் மாநில நிர்வாகக் குழு பதவிகளுக்கான 2024-2027 ஆம் ஆண்டுக்கான தேர்தல் அறிவிப்பு மாநிலத் தலைவரால் செய்யப்பட்டது.தேர்தலுக்கான அறிவிப்பை மாநில தலைவர் வெளியிட மாநிலத் தேர்தல் அலுவலரும் திருவண்ணாமலை மாவட்ட ஒன்றியத்தின் தலைவருமான திரு.ஆர்.பாபு பெற்றுக்கொண்டார்.பின்பு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த மாநிலத் தலைவர், தேர்தலுக்கான முறையான அறிவிப்பு பத்திரிகைகளுக்கு தந்து, ஒன்றியத்தின் சார்பில் இரண்டு முறை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்டகோரிக்கைகளைமுன்வைத்துபேசியதைபகிர்ந்துகொண்டார்.இந்நிகழ்வுகளின்போது மாநில பொதுச் செயலாளர் டி.கே.சிவக்குமார், மாநில துணைத் தலைவர்கள் வ.மாரிமுத்து, ஆலிஸ் ஷீலா, மாநில மகளிர் அணிச் செயலாளரும், துணைத் தேர்தல் அலுவலருமான பத்மினி, தலைமை நிலையச் செயலாளர் மகேந்திரகுமார், மாநில துணைப் பொதுச் செயலாளர் ரெங்கராஜன், மத்திய சென்னை மாவட்டத் தலைவர் முத்துரமேஷ், வடசென்னை மாவட்டத் தலைவர் கவிதா, விழுப்புரம் மாவட்டத் தலைவர் நாகராஜன், கல்வித் துறை அமைச்சுப் பணி அலுவலர் சங்க மாநில தலைவர் பாலசுப்பிரமணியம், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் பாஸ்கரன், துணைத் தலைவர் முருகேசன், திருவண்ணாமலை மாவட்ட பொருளாளர் சக்திவேல், பிற்படுத்தப்பட்டோர் துறை காப்பாளர் மற்றும் ஆசிரியர் சங்கத்தின் துணைத் தலைவர் அமாவாசை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு