சென்னை:
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2022-2023-ம் ஆண்டிற்கான 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த ஆண்டு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை 7.88 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள். இன்று தொடங்கிய 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 5-ம் தேதி நிறைவுபெறுகிறது. சென்னையில் 180 மையங்களில் 42,122 பேர் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 3,224 மையங்களில் தமிழகத்தில் 3,184 மையங்களிலும், புதுச்சேரியில் 40 மையங்களிலும் தேர்வு நடைபெறுகிறது. 4,20, 356 பெண்களும் 3,67,707 ஆண்களும் மற்றும் 1 பாலினத்தவர்களும் மொத்தம் 7,88,064 பேர் தேர்வு எழுதுகிறார்கள். 5338 தனித்தேர்வர்களும், மாற்றுத்திறனாளிகள் 5,835 பேரும், 125 சிறைவாசிக்களும் பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தேர்வுப்பணிக்காக 43,200 கண்காணிப்பாளர்கள், 1134 நிலைக்குழுக்கள், 3100 பறக்கும் படையினரும் பணியில் உள்ளனர். பொதுத்தேர்வு நடக்கும் இடங்களில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது. மாணவர்கள் சிரமமின்றி தேர்வு எழுத பள்ளிக் கல்வித்துறை சார்பில் விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று தொடங்கிய 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெறுகிறது.
மார்ச் -14 மொழிப்பாடம், மார்ச் -16 ஆங்கிலம், மார்ச் 20 – இயற்பியல், பொருளாதாரம், மார்ச் 24 – உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், மார்ச் 28 – வேதியியல், கணக்கியல், புவியியல், மார்ச் 30 – கணினி அறிவியல், ஏப்ரல் 5 – கணிதம், விலங்கியல் ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெறும்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு