சென்னை:
தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் ஒருங்கிணைக்கும் பத்திரிகையாளர்களுக்கான மாநில அளவிலான கோரிக்கை கருத்தரங்கம் செனனை அரசினர் தோட்டம் மெட்ராஸ் ரிப்போர்ட்டர்ஸ் கில்டில் நாளை (22ம் தேதி) பிற்பகல் 3 மணி அளவில் நடைபெறுகிறது.
கருத்தரங்கிற்கு மாநில தலைவர் பி.எஸ்.டி. புருசோத்தமன் தலைமை தாங்குகிறார். துணைத் தலைவர்கள் பி.சண்முகவேல், வி.மோகன், கே.மணி, ஆர்.வளையாபதி, மாநில பொதுச் செயலாளர் கே.முத்து, மாநில பொருளாளர் வி.ரவிச்சந்திரன், துணை பொதுச் செயலாளர் எஸ்.டேவிட்குமார், அமைப்பு செயலாளர்கள் ஏ.தமிழ்செல்வன், டி.கிறிஸ்டோபர், பி.ஆர்.வேளங்கன், இணை செயலாளர்கள் ஆர்.துரைக்கண்ணு, எம்.கே.சாகுல்ஹமீது, ஆர்.முருககனி, ஏ.ஆர்.லட்சுமணன், சென்னை மாவட்ட டி.யு.ஜெ.கருத்தரங்கு ஒருங்கிணைப்பு குழு கவுரவத் தலைவர் மைக்கேல்ராஜ், பொருளாளர் ரத்தினபாண்டியன், மாநில நிர்வாகக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.அண்ணாதுரை, இரா.தெ.முத்து, துணைத் தலைவர்கள் எஸ்.பஞ்சநதம், பி.ராஜேந்திரன், இணை செயலாளர் உமர்ஷெரிப், செயற்குழு உறுப்பினர்கள் ஆ.இருதயராஜ், சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
சென்னை மாவட்ட செயலாளர் ம.மீ.ஜாபர் வரவேற்கிறார். மாநில பொதுச் செயலாளர் போளூர் ஏ.சுரேஷ் தொடக்க உரையாற்றுகிறார். சி.ஐ.டி.யு. மாநில தலைவர் அ.சவுந்தரராசன், தொ.மு.ச.பேரவை பொதுச் செயலாளர் எம்.சண்முகம் எம்.பி., ஏ.ஐ.டி.யு.சி. மாநில பொதுச் செயலாளர் எம்.ராதாகிருஷ்ணன், மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளன செயல் தலைவர் எம்.துரைப்பாண்டியன், தீக்கதிர் நாளிதழ் பொறுப்பாசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
ரிப்போரட்டர்ஸ் கில்டு தலைவர் ஆர்.ரங்கராஜன், எம்.யு.ஜெ. தலைவர் எல்.ஆர்.சங்கர், சென்னை பத்திரிகையாளர் மன்ற இணை செயலாளர் பாரதி தமிழன், தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்க தலைவர் ஏ.ஜெ.சகாயராஜ், தமிழ்நாடு புகைப்பட கலைஞர்கள் சங்க தலைவர் ஜோதி ராமலிங்கம்,தமிழ்நாடு மீடியா கேமராமேன் சங்க செயலாளர் எஸ்.பாஸ்கர், அறம் இணையதள ஆசிரியர் சாவித்திரி கண்ணன் ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர். சென்னை மாவட்ட தலைவர் எஸ்.பி.தேவேந்திரன் நன்றி கூறுகிறார்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு