அறத்துப்பால் : இல்லறவியல் : 1. இல்வாழ்க்கை
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் – குறள் : 50
உலகத்தில் வாழவேண்டிய முறைப்படி இல்லறம் மேற்கொண்டு வாழ்பவன் (இவ்வுலகத்தானேயானாலும்) வானுலகில் உள்ள தேவதூதர்களுள் ஒருவனாக வைத்து மதிக்கப்படுவான்.