தலைசிறந்த தலைவர்களில் ஒருவரை இந்தியா இழந்துவிட்டது.
எளிய பின்னணியில் இருந்து வந்து பொருளாதார நிபுணராக உயர்ந்தவர்.
நாடாளுமன்றத்திலும் மன்மோகன் சிங்கின் செயல்பாடுகள் நுண்ணறிவு மிக்கவையாக இருந்தது – முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்.கடந்த 1932 செப்., 26ல் அன்றைய பஞ்சாப் மாகாணத்தில் பிறந்தார் மன்மோகன் சிங்.பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர், பேராசிரியராகவும், ஐக்கிய நாடுகள் சபையிலும் பணியாற்றினார்.இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியின் இயக்குனர், அயல்நாட்டு பொருளாதார ஆலோசகர், நிதி அமைச்சக செயலராகவும் பதவி வகித்தார்.ரிசர்வ் வங்கியின் கவர்னராகவும், 1991-1996 காலகட்டத்தில் நிதி அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.கடந்த 2004-2014 காலகட்டத்தில் இந்திய பிரதமராக பதவி வகித்த மன்மோகன் சிங் (வயது 92] இன்று காலமானார்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு