விசாகப்பட்டிணம்:
ஆந்திரப் பிரதேச மாநிலம் அமடபாகுலா பகுதியைச் சேர்ந்தவர் சங்கரம்மா (வயது 64). இவரும் இவரது மகன் ராமுலு, மருமகள் சிவமணி அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். மகன் ராமு அதே பகுதியில் கறிக்கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், சில மாதங்களாக சங்கரம்மா உடல்நிலை பாதிக்கப்பட்டார். ராமுலு அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வந்துள்ளார். இருந்தும் சங்கரம்மா உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
தாயை கவனிக்க முடியாமல் அவதிப்பட்ட மகன் ராமுலு, தாயைக் கொள்வதற்காக மனைவியுடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளார். மார்ச் 21ஆம் தேதி அன்று இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த சங்கரம்மாவை கழுத்தை நெரித்து இரண்டு பேரும் கொலை செய்துள்ளனர்.
பின்னர் சங்கரம்மாவின் உடலைத் துண்டு துண்டாக வெட்டி, அவர்களது வீட்டின் முன்பாக இருந்த தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்துள்ளனர். சங்கரம்மா வீட்டில் இல்லாதது அறிந்த அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அவர் எங்கே என ராமுலுவிடம் கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளார். இதில் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் ராமுலு மற்றும் அவரது மனைவி சிவமணி இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையில், நடக்க முடியாமல் எனது தாய் பல நாட்களாக அவதிப்பட்டு வந்தார். என்னால் தொடர்ந்து மருத்துவச் சிகிச்சை அளிக்க முடியவில்லை. அதன் காரணமாக நாங்கள் இருவரும் அவரை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்திருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.
பின்னர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீர் தொட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சங்கரம்மாவின் உடல் பாகங்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்த இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு