லண்டன்:
பாம்பே ஜெயஸ்ரீ எனப் பரவலாக அறியப்படும் ஜெயஸ்ரீ இராம்நாத் புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி. இவர் தென்னிந்தியத் திரைப்படங்களில் முன்னணி இசையமைப்பாளர்களான இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ், வித்யாசாகர், யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் பல வெற்றித் திரைப்பாடல்களைப் பாடியுள்ளார். அதுமட்டுமல்லாது அவர் வயலின் வாத்தியக்கலைஞர் லால்குடி ஜெயராமனின் சீடரரும்ஆவார்
பாடகி பாம்பே ஜெயஸ்ரீ இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில், நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்த நிலையில் இவர் ஓட்டலில் தங்கி இருந்தபோது, திடீர் என உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். அவரது மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அத்தோடு அவருடைய உடல்நிலை சற்று ஆபத்தான நிலையில் உள்ளதாகவே தகவல்கள் வெளியாகி உள்ளன.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு