🌹 கல்வி அறிவு இல்லாத பெண்கள் களர் நிலம் போன்றவர்கள் அங்கே புல் விளைந்திடலாம் நல்ல புதல்வர்கள் விளைவதில்லை
என்றார் பாவேந்தர் பாரதிதாசன்
🌹 வீர சிவாஜியை மிகச்சிறந்த வீரனாக உருவாக்கியது அவரது அன்னை ஜீஜிபாய் ஆவார்
🌹முட்டாள் என்று ஒதுக்கப்பட்ட குழந்தையை
அதாவது தாமஸ் ஆல்வா எடிசனை
தன் வளர்ப்பால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை கண்டறிய வைத்தது அவரது அன்னை நான்சி ஆவார்
🌹பெண்களுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் பிறந்த நாட்டை நாம் தாய் நாடு என்கிறோம்.!!!
பேசும் மொழியை தாய் மொழி என்கிறோம்.!!!
சுருக்கமாக சொல்லப்போனால் பெண் என்பவள் “பூஜியத்திற்கு”
சமம்.!!!
பூஜியம் இல்லாமல்கணக்கு இல்லை,காசு இல்லை,அதுபோல
பெண்கள் இல்லாமல் மனித வாழ்க்கையில் முழுமை இல்லை முழு இன்பமில்லை
🌹உணர்வுகளை அடக்கி வைக்கும் போது பனிமலையாகவும்
அதேசமயம் உணர்வுகளை
வெளிப்படுத்தும் போது
எரிமலையாகவும் மாறும்
சக்தி பெண்களுக்கு உண்டு.!!!
🌷 காற்றானது இதமாக வீசும் போது தென்றலாகவும் சுழற்றி அடிக்கும் போது புயலாக மாறுகிறது அதுபோல பெண்களுக்கு மென்மையும் வன்மையும் கை வந்த கலை
🌹இந்தியாவில் குறிப்பிடத்தக்க
சமூக சீர்திருத்தவாதிகள்
என்று பார்த்தால்.!!!
🌹 உடன்கட்டையென்ற சதியை ஒழித்த ராஜாராம் மோகன்ராய்
🌹 தாழ்த்தப்பட்ட மக்களுக்கு குரல் கொடுத்த ஜோதிராய் புலே
டாக்டர் அம்பேத்கார்
🌹பழமைக்கு தாழிட்டு புதுமைக்கு வித்திட்ட
தந்தை பெரியார் போன்றவர்கள் ஆவார்கள்.!!!
🌹ஜோதிராய் புலே அவர்களின் மனைவி
சாவித்திரி புலே அம்மையார் பிறந்த தினம் ஜனவரி – 03 ஆகிய இன்றாகும்.!!!
🌹சாவித்திரி புலே அவர்கள்
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்
&முதல் பெண் சமூக சீர்திருத்தவாதி ஆவார்.!!!இந்தியாவின் முதல் மகாத்மாவான
ஜோதிராய் புலே அவர்களின் மனைவி ஆவார்.!!!
இந்தியாவின் முதல் பெண்கள் பள்ளியை புனேவில் துவங்கினார் கணவரின் சமூக சீர்திருத்த முயற்சிக்கு
தூணாக துணையாக துணைவியாராக
அவர் மக்களிடையே கல்வியறிவை பெருக்கும்
ஆசைக்கு ஆணி வேராக
முற்போக்கு சிந்தனைக்கு முதுகெழும்பாக கடைசிவரை திகழ்ந்தார்.!!!
🌹1831- ஆண்டு ஜனவரி 3 -ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்தவர் சாவித்திரிபாய் புலே.
🌹இந்தியாவில் இருந்த சாதி ஒடுக்குமுறைக்கும், சமூகக் கொடுமைக்கும் எதிராகப் போராடியவர்களுள் சாவித்திரிபாய் முதன்மையானவர். 150 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக தனது கணவர் மகாத்மா ஜோதிபா புலேவுடன் சேர்ந்து போராடியவர்.
🌹இவரது கணவர் 1848ஆம் ஆண்டு புனேயில் பெண்களுக்கென முதல் பள்ளியைத் துவக்கி வைத்தார். இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராகவும், இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராகவும் திகழ்ந்தவர் சாவித்திரிபாய்.
🌹இவரை கவுரவிக்கும் விதமாக 2014 ஆம் ஆண்டு புனே பல்கலைகழகத்திற்கு சாவித்திரிபாய் புலே பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
🌹இவரின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனம், புன்சிரிப்புடன் ஏராளமான பெண்களை சாவித்திரிபாய் அரவணைக்கும்படியான சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
பெண்கள் பற்றிய பொன் மொழிகள்
🌹பெண்களின் கண்ணீர் உலகிலேயே மிக ஆற்றலுள்ள நீர் சக்தி – வில்சன் மிஸ்னர்.
🌹காற்றை விடக் கடும் வேகம் கொண்டது பெண்களின்
எண்ணம் – ஷேக்ஸ்பியர்.
🌹பெண் எந்தக் காற்றிலும் அசைந்தாடிக் கொண்டிருக்கும்
நாணலைப் போன்றவள். ஆனால், பெரும்புயலிலும்
அவள் ஒடிந்து விழ மாட்டாள் – வேட்லி.
🌹பெண்களுக்குரிய
சுதந்திரத்தை வழங்காதவரை ஒரு நாடு சுபீட்சம் அடையாது –
நேரு.
🌹பெண்ணின் இதயம் அவளுடைய உதடுகளில் இருக்கிறது.
ஆனால், அவளுடைய ஆன்மாவோ அவளுடைய கண்களில்
இருக்கிறது – லார்ட் பைரன்.
🌹பொய்மை கோழைத்தனம், கீழ்க்குணம் ஆகிய
மூன்றுமே பெண்கள் பெரிதும் வெறுப்பவை – ஷேக்ஸ்பியர்.
🌹பெண்களிடம் உள்ள நல்ல பண்பு அவர்களுக்குப்
பாராட்டை உண்டு பண்ணுகிறது. ஆனால், அவர்களின் நல்ல
நடத்தையே அவர்களைத் தெய்வங்களாக்குகிறது –
ஷேக்ஸ்பியர்.
🌹பெண்ணின் ஒழுக்கத்தில் நம்பிக்கையாக
இருப்பதே குடும்ப
இன்பத்தின் அடிப்படை – லாண்டர்.
🌹எந்த இடத்தில் பெண்கள் மரியாதையாக நடத்தப்படுகின்ற
னரோ அந்த இடத்தில் தேவதைகள் குடியிருக்கின்றனர் –
மகாபாரதம்
🌹தன்னைத் தானே பாதுகாத்துக்
கொள்வதே பெண்களுக்கு அழகு – ஒளவையார்
🌹பெண்ணாய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திருக்க வேண்டும் அம்மா – கவிமணி தேசிக விநாயகம்.
🌹ஒரு பெண்ணின் உள்ளமாகிய கடலில் இரக்கம், தியாகம்,
கற்பு, காதல் ஆகிய நன்முத்துக்களைக் காணலாம்…
🌹மனித வாழ்வை சொர்க்கம் ஆக்குவதும் நரகம் ஆக்குவதும் உறுதியான ஒழுக்கமான பெண்ணின் கையில் உள்ளது – ஞானசித்தன்
பெண்கள் நாட்டின் கண்கள் மட்டுமல்ல அவர்கள் தூண்கள் என்று கூறி
இன்றைய தகவலை நான் நிறைவு செய்கிறேன்.!!!
நன்றி.!!!வணக்கம்.!!