நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், சென்னைக்கு முக்கியத்துவம் அளிக்கும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு செயல்பாட்டுக்கு வரும்போருது, சென்னை மாநகரம் உலக தரத்துக்கு உயர்ந்து நிற்கும் என்பதில் மாறுபட்ட கருத்து இருக்காது.
திமுக தனது தேர்தல் அறிக்கையில் சென்னைக்கு பெரிய உள்கட்டமைப்பு திட்டங்கள் தீட்டப்படும் என உறுதியளித்துள்ளது. மேலும், விம்கோ நகர் முதல் எண்ணூர் வரை, நகரத்திற்கான மூன்றாவது ரயில் முனையம் மற்றும் வேளச்சேரியில் இருந்து செயின்ட் தாமஸ் மவுண்ட் வரையிலான எம்ஆர்டிஎஸ் ரயில் திட்டத்தை விரைவுபடுத்துகிறது. மேலும் பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.
1) சென்னைக்கான மூன்றாவது ரயில் முனையம்
2) வேளச்சேரி-மவுண்ட் இடையே நீண்டகாலமாக தாமதமாகி வரும் ரயில்வே திட்டம் நிறைவேற்றப்படும்
3) கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் வில்லிவாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து தெற்கு நோக்கி சுரங்கப்பாதை பாதை
4) கோயம்பேடு-அம்பத்தூர் மெட்ரோ ரயில் திட்டம்
5) மெட்ரோ ரயில் விம்கோவில் இருந்து எண்ணூர் வரை நீட்டிக்கப்படும்
6) அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் விம்கோ நகர் ரயில் நிலையம் மேம்படுத்தப்படும்
7) மணலி பகுதிக்கு ESI மருத்துவமனை மாசு தொடர்பான பிரச்சினைகளை பூர்த்தி செய்ய
8) #செங்கல்பேட்டையில் தடுப்பூசி தயாரிப்பு வசதியை மேம்படுத்துதல்
9) செங்கல்பட்டுக்கு விரைவான இயக்கத்திற்காக ரயில் பாதைகளை மேம்படுத்துதல் என ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (புதன்கிழமை மார்ச் 20ந்தேதி) வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், வடசென்னையில் உள்ள விம்கோ நகர் ரயில் நிலையத்தை அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் சிறந்த வசதிகளுடன் மேம்படுத்துவதாகவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. விம்கோ நகரில் அனைத்து ரயில்களும் நிறுத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொளத்தூரில் வசிப்பவர்களின் நலனுக்காக வில்லிவாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து தெற்கு நோக்கி சுரங்கப்பாதை அமைக்கப்படும் என உறுதியளித்துள்ளது.
காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி புதிய ரயில்பாதை உருவாக்கப்படும்.
சுகாதாரத் தரப்பில், வடசென்னையில் மணலியில் இஎஸ்ஐ மருத்துவமனை நிறுவப்பட்டு, செங்கல்பட்டில் ஒருங்கிணைந்த தடுப்பூசி தயாரிப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு உற்பத்தி தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைக் குழுவில் இடம்பெற்றவருமான மேயர் பிரியா, திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட உறுதிமொழிகள், நகரின் அனைத்துப் பகுதிகளையும் முன்னெப்போதையும் விட சிறப்பாக இணைக்கும் வகையில் இருக்கும் என்றார்.
தற்போது எண்ணூரில் இருந்து விம்கோ நகருக்கு பஸ் அல்லது ஷேர் ஆட்டோவில் செல்கின்றனர். எண்ணூர் மற்றும் அம்பத்தூருக்கு ரயில் பாதை விரிவாக்கம் செய்யப்பட்டவுடன், கூடுதல் பகுதிகள் உட்பட நகரம் முழுவதும் இணைக்கப்படும், ”என்று அவர் கூறினார்.
தேர்தல் அறிக்கை தயாரிக்க, நாங்கள், விரிவான களப் பயணங்களை மேற்கொண்டதாகவும், தேர்தல் அறிக்கையைத் தயாரிப்பதற்காக மக்களைச் சந்தித்து அவர்களின் கருத்துக்களைப் பெற்றதாகவும் தெரிவித்தவர், “மாதவரம் மற்றும் மணலியில் வசிக்கும் மக்கள், RGGGH அல்லது ஸ்டான்லியை அடைய, 10 கி.மீ.க்கு மேல் பயணிக்க வேண்டியுள்ளதால், மருத்துவமனை வேண்டும் என, நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதனால், அந்த பகுதியில் ஒரு ஒரு புதிய மருத்துவமனை அமைப்பதின் மூலம், மாசு பாதித்த பகுதிகளுக்கும், அந்த பகுதி மக்களுக்கும், விரைவான சிகிச்சை சாத்தியமாகும்,” என்று அவர் கூறினார்.
மாநில திட்ட ஆணையர் உறுப்பினரும், அறிக்கைக் குழுவின் உறுப்பினருமான டாக்டர் என் எழிலன் கூறும்போது, சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் கடலோரப் பகுதிகளுக்கும் முழுமையான அணுகுமுறையை வழங்கியுள்ளோம் என்றார். “மெட்ரோ நகரங்கள் மட்டுமல்ல, 2 மற்றும் 3 மாவட்டங்களுக்கு ஸ்மார்ட் சிட்டி முயற்சிகளை விரிவுபடுத்துவதில் தேர்தல் அறிக்கை ஆர்வமாக உள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.