17 அழுக்காறாமை
பிறர் ஆக்கம் கண்டு பொறாமைப்படாது இருத்தல்
=========================================
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து(164)
விளக்கம்:
அறிவுடையோர் பொறாமை காரணமாக தீய நெறியால் தமக்கு கேடு வருவதை அறிந்து அறம் அல்லாதவைகளை செய்யமாட்டார்கள்.