வான் சிறப்பு
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு
பரிசுத்த ஆவியின் பொழிவு இல்லாவிட்டால் கடவுளுக்குச் செய்யப்படும் சிறப்பு வழிபாடாகிய அன்றாடப் பூசையும் ஆண்டு முழுவதும் நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது. அதாவது பரிசுத்த ஆவியின் பொழிவைப் பெறாத நிலையில் வழிபாடு அனைத்தும் நின்று போகும்.