குறள் 240: வசைஓழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய
வாழ்வாரே வாழா தவர்.
பொருள் :புகழில்லாமல் வாழ்பவர் உயிரோடு இருந்த போதிலும் இறந்தவராகக் கருத்தப்படுவார் எனப்படுகிறது. அப்படியே திருமறையும் 1தீமோத்தேயு 5:6ல் “சுகபோகமாய் வாழ்கிறவள் உயிரோடே செத்தவள்.” என்றும், 1தீ மோத்தேயு 5:8ல் “ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்.” என்றும், பிரசங்கி 3:12ல் “மகிழ்ச்சியாயிருப்பதும், உயிரோடிருக்கையில் நன்மைசெய்வதுமேயல்லாமல், வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லையென்று அறிந்தேன்.” என்றும் திருக்குறளும்
திருமறையும் புகழ் எனும் அழியா கீர்த்தியை ஒரேவிதமாய் வலியுறுத்துவதை அறியலாம்.
இவண் பேராசிரியர் இறைமொழியன் லூர்துசாமிu திருக்குறள் உண்மை உரை பேரவை.