திருக்குறள் உண்மை உரை வழி திருக்குறள் அறத்துப்பால் அதிகாரம் 25 ‘அருளுடைமை’ (தொடர்பு கருதாமல் எல்லாரிடத்திலும் இரக்கம் காட்டுதல்)
குறள் 241:அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள”
பொருள்:அருளாகிய செல்வமே செல்வங்கள் எல்லாவற்றிலும் சிறந்தது. பொருளாகிய செல்வங்கள் கீழ் மக்களிடத்திலும் உள்ளன எனப்படுகிறது. அப்படியே திருமறையும் நீதிமொழிகள் 21:10ல் “துன்மார்க்கனுடைய மனம் பொல்லாப்பைச் செய்ய விரும்பும்; அவன் கண்களில் அவன் அயலானுக்கு இரக்கங்கிடையாது.” என்றும், நீதிமொழிகள் 21:6ல் “பொய்நாவினால் பொருளைச் சம்பாதிப்பது சாவைத் தேடுகிறவர்கள் விடுகிற சுவாசம்போலிருக்கும்.” என்றும் திருக்குறளும்,திருமறையும் அருளுடைமை எனும் இரக்க குணத்தை ஒரேவிதமாய் வலியுறுத்துவதை அறியலாம்.இவண் பேராசிரியர் இறைமொழியன் லூர்துசாமிu திருக்குறள் உண்மை உரை பேரவை.