திருக்குறள் உண்மை உரை வழி திருக்குறள் அறத்துப்பால் அதிகாரம் 25 ‘அருளுடைமை’ (தொடர்பு கருதாமல் எல்லாரிடத்திலும் இரக்கம் காட்டுதல்)
குறள் 243: “அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த இன்னா உலகம் புகல் ”
பொருள்:அதாவது, இருள் சூழ்ந்த துன்ப உலகமாகிய நரகத்துள் சேர்தல், அருள் நிறைந்த நெஞ்சம் உடையவர்க்கு இல்லை எனப்படுகிறது. அப்படியே திருமறையும் மத்தேயு 18:33ல் “நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன் வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி”என்றும், மத்தேயு 5:27ல் “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்ளுகிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு ஏதுவாயிருப்பான்.” என்றும், மத்தேயு 18:35ல் “நீங்களும் அவனவன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்.” என்றும் திருக்குறளும் திருமறையும் அருளுடைமை எனும் இரக்க குணத்தை ஒரேவிதமாய் வலியுறுத்துவதை அறியலாம்.இவண் பேராசிரியர் இறைமொழியன் லூர்துசாமிu திருக்குறள் உண்மை உரை பேரவை
.