1. அறத்துப்பால் : 2. இல்லறவியல் : 6. வாழ்க்கை துணை நலம்
மனைத்தக்க மாண்புடையாள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை – குறள் : 51
இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்குணம் நற்செயல்கள் உடையவளாய், தன்னை மணந்து கொண்ட கணவனின் வருவாய்க்குத் தக்கவாறு சிக்கனமாக வாழ்க்கை நடத்துபவளே வாழ்க்கைத் துணை ஆவாள்.