1. அறத்துப்பால் : 2. இனியவை கூறல. : 3. அடக்கமுடைமை
செருக்கில்லாமலும் எல்லை கடவாமலும் மனம் மொழி
மெய்களால் அடங்கி நடத்தல்
ஒருமையுள் ஆமைபோல் ஐந்துஅடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து (குறள் 126)
விளக்கம்:
ஆமையைப்போல் ஒருவன் ஐம்பொறிகளையும் அடக்க வல்லவனானால் அவ்வல்லமை அவனுக்குத் தொடர்ந்து எழுந்து வருகின்ற பல நிலைகளிலும் பாதுகாப்பாகும் சிறப்புடையது.