சென்னை:
சென்னை குரோம்பேட்டை காவல் நிலையத்தில் கோவிந்தராஜ், மணிமேகலை ஆகியோர் தனது மகன் ராகவன் காணவில்லை என்று புகார் கொடுத்திருந்தனர். இது சம்பந்தமாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அம்பத்தூர் பகுதியில் உள்ள திருநங்கைகளோடு ராகவன் இருப்பதாக தகவல் இடைத்து.
இதையடுத்து ராகவனின் பெற்றோர் அங்கு சென்று பார்த்தபோது ராகவன் அங்கு இல்லை. இதையடுத்து ராகவனின் பெற்றோர் பல்லாவரம், தாம்பரம், குரோம்பேட்டை, பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள திருநங்கைகளிடம் இதுபற்றி விசாரித்தனர்.
அப்போது, ராகவன் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு பகுதியில் திருநங்கைகள் சவி, வினோதனி ஆகியோரிடம் இருப்பதாக தகவல் கிடைத்தது. இவர்களது செல்போனில் தொடர்பு கொண்டு வீடியோக காண்பரன்ஸ் காலில் பேசி ராகவன் இருப்பதை உறுதி செய்தனர்.
இதன் பிறகு ராகவனை குரோம்பேட்டை காவல் நிலையம் அழைத்து வருமாறு தெரிவிக்கப்பட்டது. இதற்குள் காவல்துறையும் நுங்கம்பாக்கம் சூளைமேட்டில் உள்ள திருநங்கைகளிடம் ராகவன் இருக்கும் இடத்தை கண்டறிந்து தொடர்பு கொண்டு இன்று குரோம்பேட்டை காவல் நிலையத்துக்கு வரவழைத்தனர்.
காவல்துறையினர், ராகவனிடம் விசாரித்தபோது, ராகவனுக்கு வயது 16 என்றும், அவர் திருநங்கையாக மாறிவிட்டதாகவும், தான் பெற்றோரிடம் செல்ல விருப்பம் இல்லை என்றும் தெரிவித்தார். இதனால் மனமுடைந்த ராகவனின் பெற்றோர் கண்ணீர் மல்க, தனது மகனை வீட்டுக்கு வரும்படி அழைத்தனர்.
ஆனால் ராகவனோ பிடிவாதமாக வர மறுத்ததோடு மட்டும் அல்லாமல் வீட்டிற்கு வலுகட்டாயமாக அழைத்து சென்றாலோ, சீர்திருத்த சீர்நோக்கு (ஓம்)பள்ளிக்கு அனுப்பினாலோ தற்கொலை செய்துகொள்வேன் என்று தெரிவித்தார். இதனால் காவல்துறையினரும், பெற்றோரும் என்ன செய்வது என்று புரியாமல் திகைத்தனர்.
திருநங்கை ராகவன் பெற்றோருடன் செல்ல மறுத்ததால் வருகிற 21ம் தேதி (வெள்ளிக்கிழமை) நீதிமன்றத்தில் ராகவனை ஆஜர்படுத்துகிறோம். அதுவரை ராகவன், திருநங்கைகளான சவி, வினோதினி ஆகியோரிடம் இருக்கட்டும் என்று கூறி அனுப்பி வைத்தனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு