தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (7.7.2023) சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில், இந்து சமய அறநிலையத் துறையின் திருக்கோயில்கள் சார்பில் 34 இணைகளுக்கான திருமணங்களை தலைமையேற்று நடத்தி வைத்து, சீர்வரிசை பொருட்களை வழங்கி மணமக்களை வாழ்த்தினார். இத்திருமண விழாவில், உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு. சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்
நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான். பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழச்சி தங்கபாண்டியன், டாக்டர் கனிமொழி சோமு, சட்டமன்ற உறுப்பினர் த. வேலு, கற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் க. மணிவாசன், இ.ஆ.பட இந்துசமய அறநிலையத் துறை சிறப்புப் பணி அலுவலர் ஜெ. குமரகுருபரன், இந்து சமய அறநிலைத் துறை ஆணையர் க.வீ. முரளீதான், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு