சென்னை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ந் தேதி அதிகாலையில் திருவண்ணாமலை, போளூர், கலசபாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஏ.டி.எம். மையங்களில் மர்ம நபர்கள் பணம் எடுக்கும் எந்திரங்களை வெல்டிங் எந்திரத்தின் மூலம் வெட்டி அதிலிருந்த ரூ.72 லட்சத்து 78 ஆயிரத்து 600-ஐ கொள்ளையடித்து சென்றனர்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஏடிஎம் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி நிஜாமுதீனை தனிப்படை போலீசார் சென்னையில் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏடிஎம் கொள்ளை வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு