ஆழ்ந்த இரங்கல் முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியரும், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மருமகனுமான திரு.முரசொலி செல்வம் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளருமான திரு.முரசொலி செல்வம் முரசொலி பத்திரிகையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியவர். திமுகவின் அதிகாரப்பூர்வமான பத்திரிகையான முரசொலியை தனது மூத்த பிள்ளை என்று கூறி வளர்த்தவர்.
பத்திரிகை ஆசிரியராக அரை நூற்றாண்டுக் காலத்திற்கும் மேலாக திராவிடக் கருத்தியலைச் சுமந்தவர். திரைப்படத் துறையிலும் பங்களிப்பாற்றியவர். முரசொலி செல்வம் மறைவு திமுகவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு
திரு.முரசொலி செல்வம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.