தஞ்சாவூர்:
தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிப்படி தனியார் துறையில் 75 சதவீத வேலை தமிழர்களுக்கு ஒதுக்க வேண்டும்‘ என தஞ்சையில் இன்று (08.03.2023) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்யில் பெ. மணியரசன் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக உடைப்பெடுத்த வெள்ளம் போல் வடநாட்டிலிருந்து இந்திக்காரர்கள் அன்றாடம் தமிழ்நாட்டில் குடியேறுகிறார்கள். தமிழ்நாடு உள்ளாட்சி அமைச்சர். கே.என். நேரு, 25.1.2023 அன்று திருச்சியில் நடந்த மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேசியபோது, “ஒரு நாளைக்கு 1000 குடும்பங்கள், 2000 குடும்பங்கள் என்று உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார், இராசஸ்தான் மாநிலங்களில் இருந்து வந்து சென்னையில் குடியேறுகிறார்கள். இவர்களால் தி.மு.க.வுக்குத்தான் ஆபத்து. இவர்கள் நமக்கு ஓட்டுப் போட மாட்டார்கள்” என்று பேசினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான (2021) வாக்குறுதி அறிக்கையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், தனியார் துறையில் 75 விழுக்காடு வேலை தமிழர்களுக்கு ஒதுக்கிட சட்டம் இயற்றுவோம் என்று கூறியது அதை மு.க. ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும் என்று, வேலை இல்லாமல் தவிக்கும் 75 லட்சம் தமிழர்கள் ஆண்களும் – பெண்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். அதைச் செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் தமிழ்நாடு முதலமைச்சரைக் கேட்டுக் கொள்கிறது.
கடந்த பத்தாண்டுகளாக தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசின் அலுவலகங்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அனைத்திலும் 95 விழுக்காடு வேலை இந்திக்காரர்களுக்கே வழங்குகிறார்கள். சூழ்ச்சியாக, தமிழர்களைப் புறக்கணிக்கிறார்கள். இதில் தமிழர்களுக்குரிய பங்கு கிடைக்கச் செய்ய தி.மு.க. அரசு, கடந்த 22 மாதங்களாக துரும்பைக் கூட அசைக்கவில்லை. இவற்றில் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கு வேண்டும்.
மிகையாக வெள்ளப் பெருக்குபோல் தமிழ்நாட்டு வேலைகளில் சேர்ந்து குடியேறும் இந்திக்காரர்களைத் தடுக்கவில்லை என்றால், தமிழ்நாடு தமிழர்களின் தாயகமாக இல்லாமல் இந்திக்காரர்களின் இன்னொரு மாநிலமாக ஆகிவிடும்.
இந்த அபாயத்தைத் தடுக்க அருணாச்சலப்பிரதேசம், நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர் மாநிலங்களில் இருப்பது போல், தமிழ்நாட்டிற்கு பிற மாநிலத்தவரை அனுமதிப்பது அல்லது மறுப்பது தொடர்பான “உள் அனுமதி அதிகாரம்” கோரிப் பெற தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஐயா பெ. மணியரசன் கூறினார்.
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன், பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் பி. தென்னவன், தஞ்சை மாநகரச் செயலாளர் தோழர் இலெ. இராமசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு