கும்பகோணம்:
குல தெய்வ கோவிலுக்கு சென்றபோது செல்போனில் புகைப்படம் எடுத்தவர்களிடம் நயன்தாரா கடும் கோபமடைந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரட்டை குழந்தை இருப்பதாக விக்னேஷ் சிவன் அறிவித்தார்.பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தங்கள் குழந்தைகளின் பெயர்களை அறிவித்தனர்.
இந்த நிலையில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் குலதெய்வ வழிபாட்டிற்காக கும்பகோணம் அடுத்த மேலவழுத்தூர் கிராமத்தில் உள்ள ஆற்றங்கரை காமாட்சி அம்மன் ஆலயத்துக்கு சென்றனர். நயன்தாரா வருகையை அறிந்த உள்ளூர் முக்கியஸ்தர்கள் பொன்னாடை வாங்கி வைத்து காத்திருந்தனர். கோவிலுக்கு வந்த நயன்தாராவுக்கு பொன்னாடை கொடுத்த போது அதை ஏற்காமல் அவர் புறக்கணித்தார்.
சிறிய கோவிலில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடியுடன் போலீசாருடன் பலத்த பாதுகாப்புகளுடன் சாமி கும்பிட்டனர். அப்போது அங்கு சென்ற புகைப்பட கலைஞர்கள் கோவிலில் சாமி கும்பிட்ட நயன்தாராவை போட்டோவுக்கு போஸ் கொடுக்க சொன்னதால் டென்சனான நயன்தாரா ஒளிப்பதிவாளர்களை போலீஸ் உதவியுடன் வெளியே விரட்டி விட்டனர்.
பின்னர் அங்கு வழிபாட்டை முடித்துக் கொண்டு ஐராதீஸ்வரர் கோவிலுக்கு சென்றனர் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி. முன் எச்சரிக்கையாக கோவில் வாசல் முன் பக்கமாக பூட்டப்பட்டது. அவர்களை பார்ப்பதற்காக கோவில் வாசலில் காத்திருந்தனர். கோவிலிவ் இருந்து வெளியே வந்த நயன்தாரா காத்திருந்த மக்களை பார்த்து சிரித்த படி கையசைத்தார். அப்போது அங்கிருந்த ரசிகர்கள் மட்டுமல்லாமல் பாதுகாப்பு பணியை மறந்த காவல்துறை அதிகாரியும் செல்போனில் படம் பிடித்தார்.
பின்தொடர்ந்து வந்த கல்தூரி மாணவிகளுடன் செல்பி எடுத்த போது ஒரு பெண் நயன்தாராவின் தோளில் கை வைத்ததால் மீண்டும் கோபமடைந்த நயன்தாரா சத்தம் போட்டு விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
அங்கிருந்து திருச்சி ரயில் நிலையம் வந்த நயன்தாராவை காண ஏராளமானோர் முண்டியடித்தனர். ஆளாளுக்கு செல்போனில் படம் பிடித்ததால் நயன்தாரா கடும் டென்சன் ஆனார். பின்னர் ஒருவழியாக கூட்டத்தை மீறி ரயிலுக்குள் ஏறியபோது அங்கும் ஒரு ரசிகர் நயன்தாரா செல்போனில் போட்டோ எடுத்தபடி நின்றார். இதனால் ஆத்திரம் அடைந்த நயன்தாரா அந்த இளைஞரை முறைத்துப் பார்த்தப்படி தன்னை படம் எடுக்க கூடாது என்றும் மீறி புகைப்படம் எடுத்தால் செல்போனை உடைத்து விடுவேன் என்றும் எச்சரித்தார்.
தொடர்ச்சியாக நயன்தாரா டென்ஷன் ஆன சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு