சென்னை:
நடிகர் சிம்பு கதாநாயகனாக நடித்த பத்து தல’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. சென்னை கோயம்பேடு பகுதியிலுள்ள ரோகிணி திரையரங்கில், சிறுமி உட்பட நரிக்குறவர் பெண்கள் சிலர், சிம்புவின் திரைப்படத்தைப் பார்க்க ரோகிணி திரையரங்குக்குச் சென்றிருக்கின்றனர். பின்னர், அவர்கள் டிக்கெட் வாங்கிக்கொண்டு திரையரங்குக்குள் செல்ல முயன்றனர். அப்போது அவர்களைத் திரையரங்குக்குள் ஊழியர்கள் அனுமதிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அதனால் டிக்கெட்டுடன் அவர்கள் வெளியில் காத்திருந்தனர். இந்தச் சம்பவத்தைப் பார்த்த படம் பார்க்க வந்தவர்களில் ஒருவர், தன்னுடைய செல்போனில் வீடியோவாக எடுத்தார். அப்போது ஒருவர்,
டிக்கெட் இருந்தால் உள்ளே அனுமதிக்க வேண்டியதுதானே?’ என்று திரையரங்கு ஊழியரிடம் கேட்கிறார். ஆனால், அவரோ அமைதியாக இருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதும், கோயம்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணா தலைமையிலான போலீஸார் உடனடியாக திரையரங்குக்குச் சென்று விசாரித்தனர்.
விசாரணையில், ரசிகர் மன்றம் சார்பில் இலவசமாக டிக்கெட் சிலருக்கு விநியோகிக்கப்பட்டிருக்கிறது. அதைக் கொண்டு அவர்கள் அங்கு வந்திருக்கிறார்கள். டிக்கெட்டுகளுடன் காத்திருந்தவர்களுக்கு சிலர் ஆதரவாகப் பேசியதையடுத்து, அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டு படம் பார்த்துவிட்டுச் சென்றது தெரியவந்தது.
இந்தச் சம்பவம் சர்ச்சையானதையடுத்து ரோகிணி திரையரங்க நிர்வாகம், “யூ/ஏ திரைப்படம் என்பதால் சிறுமியுடன் வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது” என்று விளக்கமளித்திருக்கிறது. போலீஸாரும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு