அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலிலும், கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும்; விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
1. ஸ்ரீபெரும்புதூர் (5) : டாக்டர் G. பிரேம்குமார், குமணன்சாவடி, பூந்தமல்லி, திருவள்ளூர் மத்திய மாவட்டம்
2. வேலூர் (8) : டாக்டர் S. பசுபதி, பூங்குளம், திருப்பத்தூர் தாலுகா திருப்பத்தூர் மாவட்டம்
3. தருமபுரி (10) : டாக்டர் R. அசோகன், தருமபுரி நகர 33-ஆவது வார்டு இளைஞர் பாசறைச் செயலாளர்
4. திருவண்ணாமலை (11) : M. கலியபெருமாள், திருவண்ணாமலை தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம்
5. கள்ளக்குறிச்சி (14) : இரா. குமரகுரு, கள்ளக்குறிச்சி மாவட்டக் கழகச் செயலாளர்
6. திருப்பூர் (18) : P. அருணாச்சலம், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்
7. நீலகிரி (தனி) (19) : D. லோகேஷ் தமிழ்செல்வன், தாதகாப்பட்டி, சேலம்
8. கோயம்புத்தூர் (20) : சிங்கை G. ராமச்சந்திரன், கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர்
9. பொள்ளாச்சி (21) : கார்த்திக் அப்புசாமி (எ) A. கார்த்திகேயன், ஆனைமலை மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் கோவை புறநகர் தெற்கு மாவட்டம்
10. திருச்சிராப்பள்ளி (24) : P. கருப்பையா, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்
11. பெரம்பலூர் (25) : N.D. சந்திரமோகன் பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்
12. மயிலாடுதுறை (28) : P.பாபு, மயிலாடுதுறை மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்
13. சிவகங்கை (31) : பனங்குடி A. சேவியர்தாஸ் கல்லல் தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் சிவகங்கை மாவட்டம்
14. தூத்துக்குடி (36) : R. சிவசாமி வேலுமணி, தியாகராயநகர் வடக்கு பகுதிக் கழகச் செயலாளர் தென் சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டம்
15. திருநெல்வேலி (38) : வழக்கறிஞர் சிம்லா முத்துச்சோழன்,
16. கன்னியாகுமரி (39) : முனைவர் பசிலியான் நசரேத், கழக மீனவர் பிரிவு இணைச் செயலாளர்
17. புதுச்சேரி (40) : G. தமிழ்வேந்தன், புதுச்சேரி மாநில இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்
சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல்
விளவங்கோடு (233) : திருமதி U. ராணி, B.A., அவர்கள் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் கழக மகளிர் அணி துணைச் செயலாளர்