நேற்று ஜூலை.5 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த நடவடிக்கையில் சென்னையில் 82 ரேஷன் கடைகளில் மலிவு விலையில் கிலோ 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் தமிழ்நாடு அரசுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர். கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தக்காளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. கடந்த வாரத்தில் இருந்து ஒரு கிலோ தக்காளி விலை 90 முதல் 110 வரை விற்டுநபனை ஆகி வருகிறது. வரத்து குறைவினால் இந்த விலையேற்றம் இருந்தது. நேற்று முதல் வடசென்னையில் 32 ரேஷன் கடைகள், தென் சென்னையில் 25 ரேஷன் கடைகள் மற்றும் மத்திய சென்னையில் 25 ரேஷன் கடைகள் என சென்னையில் மொத்தம் 82 ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப் பட்டது. இந்த விலைக் குறைப்பினை பொதுமக்கள் பெரிதும் வரவேற்றனர். துரித நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசுக்கு நன்றியையும், பாராட்டையும் தெரிவித்தனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு