வெலிங்டன்:
நியூசிலாந்தின் அருகே உள்ள கெர்மடெக் தீவுகளில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.1.ஆக பதிவாகியுள்ளது.
இது குறித்து அமெரிக்க புவியியல் மையம் தரப்பில், “நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகளில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகி உள்ளது. இதனையடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளின் முழு விவரம் இதுவரை வெளியாகவில்லை. அதிக நிலநடுக்கங்கள் ஏற்படக் கூடிய பசிபிக் ரிங் ஆஃப் ஃபயர் எனப்படும் பகுதியில் நியூசிலாந்து அமைந்துள்ளது. இதனால், அங்கு அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
இந்த நிலையில், இன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகளை நெட்டிசன்கள் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு