சென்னை:
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் ஏலம் விடப்படுவதாக மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து எதிர்ப்பலை பெருகி வருகிறது. விவசாயிகள், அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்தநிலையில் தமிழக சட்டசபையில் இது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதில் ஆளும் கட்சியினர், எதிர்க்கட்சியினர் நிலக்கரி சுரங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினர். மத்தியில் ஆளும் பா.ஜ.க. கட்சியை சேர்ந்த தமிழக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் என்ன கூறுவார் என்று எதிர்பார்த்தநிலையில் அவர், பழைய விஷயங்களை முன்நிறுத்தி பேசினார். அப்போது சபாநாயகர் குறுக்கிட்டு நிலக்கரி தொடர்பாக மட்டும் பேசுங்கள் என்றார். இதையடுத்து வானதி சீனிவாசன் பேசும்போது, தமிழ்நாட்டில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை மாற்றக்கோரி மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியிருப்பதாக கூறிவிட்டு தன் உரையை முடித்து அமர்ந்தார் வானதி சீனிவாசன்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு