புதுடெல்லி:
நீட் விலக்கு மசோதா உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளது என்று குடியரசு தலைவர் பதில் அளித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய நீட் ஒழிப்பு மசோதாவுக்கு உள்துறை அமைச்சகத்தை விரைவு செய்து ஒப்புதல் தரக் கோரி குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தேன். அரியலூர் மருத்துவ கல்லூரி அரங்கத்திற்கு அனிதாவின் பெயர் சூட்டி இன்று தமிழ்நாடு முதல்வர் அறிவித்துள்ளார். மருத்துவ அரங்கும், மருத்துவக்கல்வியும் அனித்தாக்களுக்கானது. அதை பறிப்பதை தடுக்கும் நீட் ஒழிப்பு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
நீட் மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை வழங்குவதற்கான பல்வேறு உண்மைகள் மற்றும் அரசியலமைப்பு விதிகளை விரிவாக விளக்கும் வகையில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலைக் கோரும் குறிப்பாணைக்கு உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். செப்டம்பர் 2021-ல் மாநில சட்டப் பேரவையில் மேற்படி மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு 15 மாதங்களுக்கும் மேலாகிறது. மேற்படி மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவதில் தாமதம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பெரும் மன அழுத்தத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது என்று சு.வெங்கடேசன் எம்.பி கடித்ததில் கூறியுள்ளார்.
இந்நிலையில் சு.வெங்கடேசன் எம்.பி எழுதிய கடிதத்திற்கு குடியரசு தலைவர் பதில் அளித்துள்ளார். அதில், நீட் விலக்கு மசோதா உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளது என்று குடியரசு தலைவர் பதில் அளித்துள்ளார். 19.01.2023 தேதியிட்ட இந்தியக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் ரசீதை ஒப்புக்கொள்ள எழுதுகிறேன். உரிய கவனத்திற்கு உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்