8 அணிகள் பங்கேற்றுள்ள 7வது டிஎன்பிஎல் டி.20 லீக் போட்டிகள் தற்போது திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இதில் நேற்று நடந்த போட்டிகளில் சேப்பாக் கில்லீசை திண்டுக்கல் அணியும், மற்றொரு போட்டியில் திருச்சியை கோவை அணியும் வீழ்த்தின. இன்று மாலை 7.15 மணிக்கு நடக்கும் 13வது லீக போட்டியில் நெல்லை-சேலம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
