மும்பை:
இந்தியப் பங்குச்சந்தைகளில் புதன்கிழமை வர்த்தகம் ஏற்றத்தில் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 582 புள்ளிகள் (0.99 சதவீதம்) உயர்ந்து 59,689 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 159 புள்ளிகள் (0.91 சதவீதம்) உயர்வடைந்து 17,557 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் புதன்கிழமை வர்த்தகம் சற்று ஏற்றத்துடனேயே தொடங்கியது. காலை 10:49 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 365.67 புள்ளிகள் உயர்வடைந்து 59,472.11 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 107.10 புள்ளிகள் உயர்வடைந்து 17,505.15 ஆக இருந்தது.
இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை முடிவுகள் வெளியாக இன்னும் ஒருநாள் இருக்கும் நிலையில் நிதி நிறுவனங்கள், வங்கிகளின் காலாண்டு புதுப்பிப்புகள், முதலனப்பொருள்கள், எஃப்எம்சிஜி, தொழில்நுட்ப பங்குகளின் உயர்வினால், இந்த ஆண்டில் முதல் முறையாக தொடர்ந்து நான்காவது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் இன்றும் ஏற்றத்தில் நிறைவடைந்தன.
வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 582.87 புள்ளிகள் உயர்வடைந்து 59,689.31 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 159.00 புள்ளிகள் உயர்வடைந்து 17,557.05 ஆக இருந்தது.
தனிப்பட்ட பங்குகளைப் பொருத்தவரை எல் அண்ட் டி, ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐடிசி, சன் பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், டைட்டன் கம்பெனி, டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஏசியன் பெயின்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்வடைந்திருந்தது. இன்டஸ்இன்ட் பேங்க், எம் அண்ட் எம், என்டிபிசி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, மருதி சுசூகி, நெஸ்ட்லே இந்தியா, ஆக்ஸிஸ் பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு